BREAKING NEWS

வாழப்பாடி அருகே சட்டவிரோதமாக குடோனில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா, ஷான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நபர் கைது.

வாழப்பாடி அருகே சட்டவிரோதமாக குடோனில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா, ஷான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நபர் கைது.

சேலம் வாழப்பாடி செய்தியாளர் சந்தானம்

 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சட்டவிரோதமாக குடோனில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா, ஷான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நபரை போலிசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 அவரிடமிருந்து 4 இலட்சத்து 7 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்கள் மற்றும் ஒரு இலட்சத்து ஆறாயிரம் ரூபாய் ரொக்கம் பணத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை,

 

 

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க தமிழக அரசு காவல்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது, இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பழனியாபுரம் புது காலனி பகுதியில் சட்டவிரோதமாக ஒரு குடோனில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை விற்பனை செய்யப்பட்டு வருவதாக வாழப்பாடி எஸ் ஐ கோபால் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் குடோனில் சோதனை செய்தபோது சட்டவிரோதமாக தமிழக அரசு தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா மூட்டை மூட்டையாகய பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

 

இதனையடுத்து மணி என்பவரின் மகன் சிவபாலன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து சுமார் 4 இலட்சத்து 7 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் ஒரு இலட்சத்து 6 ஆயிரம் ரொக்கம் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து சிவபாலனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )