BREAKING NEWS

வாழப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை வசதி மற்றும் சாக்கடை வசதி வேண்டி தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை.

வாழப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை வசதி மற்றும் சாக்கடை வசதி வேண்டி தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை.

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை காரணமாக வாழப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி செல்லியம்மன் நகர் இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

 

தொடர் மழை காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் குடியிருப்பு வாசிகளும் பெரும் அவதிக்குள்ள வகி வருகின்றனர் பலமுறை வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் சாலை மற்றும் சாக்கடை வசதி அமைத்து தரக்கோரி தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளதால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் இந்நிலைக்கு ஆளாகி வருகின்றனர் சாலை அமைத்து தருவார்களா வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகம் பொது மக்களின் இடையே கேள்விக்குறியாக உள்ளது.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )