BREAKING NEWS

`விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது; தண்டோரா வேண்டாம்’- கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கறார் கடிதம்.

`விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது; தண்டோரா வேண்டாம்’- கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கறார் கடிதம்.

“விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட காலத்தில் தண்டோரா தேவையில்லை” என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு தனது கைப்பட இன்று எழுதியுள்ள கடிதத்தில், “மக்களின் முக்கிய செய்திகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும், அதைச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன்.

 

அறிவியல் வளர்ந்து விட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் தண்டோரா போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை. ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் வரச்செய்வதன் மூலம் மூலை முடுக்குகளிலெல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும்.

எனவே தண்டோரா போடக் கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.

 

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )