விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயில் திருவிளக்கு பூஜையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயில் திருவிளக்கு பூஜையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள புது கிராமப் பகுதியில் இல்லத்து பிள்ளைமார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயிலில் 33 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இவ்விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோயில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், செண்பகமூர்த்தி, நகர பொருளாளர் ஆரோக்கிய ராஜ்,அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிராம் அய்யாதுரை, நகர பொருளாளர் ஆரோக்கிய ராஜ், நகர பிரதிநிதி மகேஷ் பாலா, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,அதிமுக நிர்வாகிகள் கோபி, முருகன், பழனி குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.