விபத்தில் தொழிலாளி வாயில் குத்திய இரும்பு கம்பி அகற்ற முடியாமல் தவிப்பு!!
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி வயது 36 இவர் ஒடுகத்தூர் பகுதியில் இருந்து அரிசி மூட்டை எடுத்துக்கொண்டு மலைப்பகுதியில் உள்ள வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் கரடுமுரடான சாலை என்பதால் சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் தவறி கீழே விழுந்தார். விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் இருந்த இரும்பு கம்பிகள் சிவமூர்த்தியின் வாயில் குத்தியது. படுகாயம் அடைந்த சிவமூர்த்தி மயக்க நிலையில் இரவு முழுவதும் ஒரே இடத்தில் மலைப்பகுதியில் விழுந்து கிடந்தார். காலை வரை சிவ மூர்த்தி வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அக்கம் பக்கம் தேடினர்.
மலைப்பாதை அருகே காயமடைந்து கிடந்த சிவமூர்த்தியை மீட்டனர். அவரது உறவினர்கள் வாயில் இருக்கும் இரும்பு கம்பியை எடுக்க முடியாமல் இரும்பு வெட்டும் இயந்திரத்தை கொண்டு கம்பி இரண்டாக உடைத்தார். பின்பு அவரை மீட்டு ஒடுக்கத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக வேலூர் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கத்தி பட்டு மலைப்பகுதிக்கு செல்லும் சாலையை உடனடியாக சீரமைத்து சாலை வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.