விருத்தாச்சலத்தில் திமுக வார்டு கவுன்சிலருக்கு சொந்தமான மழலையர் பள்ளியில், ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.

உண்மையைக் கண்டறிந்து, திமுக கவுன்சிலர் உட்பட சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகரத்துக்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த தேசிங்கு ராஜா நகரில் வசிக்க கூடிய (ஜோசப்-சுகன்யா தம்பதியினரின்) ஐந்து வயது கொண்ட சிறுமி, சக்தி நகரில் உள்ள வைத்தியலிங்கம் என்ற பிரைமரி & நர்சரி பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல் இன்று பள்ளிக்குச் சென்று விட்டு திரும்பிய, சிறுமியின் பிறப்புறுப்பில் ரத்தம் கசிந்ததால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த விருத்தாச்சலம் மகளிர் காவல்துறையினர், அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து, சம்பந்தப்பட்ட சிறுமி மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, சிறுமி பள்ளியில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சம்பந்தப்பட்ட வைத்தியலிங்க நர்சரி பிரைமரி ஸ்கூல், திமுகவின் 30 ஆவது வார்டு கவுன்சிலரான பக்கிரிசாமிக்கு சொந்தமான பள்ளி என்பதால், காவல்துறையினர், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக வார்டு கவுன்சிலருக்கு சொந்தமான பள்ளியில், 5-வயது கொண்ட சிறுமிக்கு, பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக, தகவல்கள் பரவியதால், விருத்தாச்சலத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும் சிறுமிக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் அளிக்கப்பட்டு இருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாக அதிகாரியான திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி மற்றும் சம்மந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.