விருத்தாச்சலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆலடி சாலையில் உள்ள ஓடை, சார் ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம் உள்ள 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட முல்லா ஏரி, 1.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட, நீர்ப்பிடிப்பு தாங்கல் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை, அகற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை அகற்றக் கோரி, ஐகோர்ட் உத்தரவின் பேரில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதன் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன் அடிப்படையில் இன்று நீர்வழி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை வருவாய் வட்டாட்சியர் தனபதி தலைமையில், காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தெய்வம் மருத்துவமனை உள்ளிட்ட குடியிருப்பு கட்டிடங்கள் வணிக வளாகங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இது மட்டுமல்லாமல் நீர் நிலையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் மற்றும் வீடுகளை கட்டிய அனைத்தையும் அலுவலகங்களும் உடனடியாக அப்புறப்படுத்தப்படும் என தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பேருந்தை இயக்குவதற்கு ஓட்டுனர்கள் கடும் அளவிற்கு உள்ளாகினர். மேலும் அவ்விடதில் மிகுந்த பரபரப்பு ஏற்ப்பட்டது.