BREAKING NEWS

விருத்தாச்சலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தில் பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் 11 வயது சிறுவன் விழுந்து உயிரிழப்பு.

விருத்தாச்சலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தில் பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் 11 வயது சிறுவன் விழுந்து உயிரிழப்பு.

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தில் நிழல் கூடைக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் 11வயது சிறுவன் விழுந்து உயிரிழந்தனர்.

 

 விஜயமாநகரம் கிராமத்தில் தமிழக அரசால் கட்டித் தரக்கூடிய பயணிகளின் நிழல் கூடை அமைப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு வேலை ஆரம்பித்தனர்.

 

இதில் நிழல் கூடைகாக தோண்டப்பட்ட பத்தடி ஆழமுள்ள பள்ளத்தில் சில தினங்களுக்கு முன்னர் பெய்து வந்த கனமழையால் பள்ளம் முழுவதும் மழைநீர் நிரம்பப்பட்டது.

 

இதில் அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த விவசாயி ஜெயமூர்த்தி என்பவரின் மகன் வினோத் 11 வயது என்ற சிறுவன் நிலை தடுமாறி பள்ளத்தில் தவறி விழுந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

 

 பின்னர் சில மணி நேரம் கழித்தும் சிறுவனை காணவில்லை என்று பெற்றோர்கள் தேட ஆரம்பித்தனர் இதில் பள்ளத்தில் கிடந்த தண்ணீர் குழம்பியதை கண்ட ஊர்க்காரர்கள் பள்ளத்தில் இறங்கி தேடிய போது சிறுவன் அதில் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.

 

மேலும் இதனை அறிந்த மங்கலம்பேட்டை காவல் துறையினர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 

 மேலும் வினோத் என்கின்ற சிறுவன் இறந்த சோகத்தில் விஜயமாநகரம் பொதுமக்கள் ஒரு மாத காலமாக கிடப்பில் போடப்பட்ட நிழல் கூடை, அதிகாரியின் அலட்சியத்தால் சிறுவனின் உயிர் பறிபோனது.

 

என்று ஊர் பொதுமக்கள் விருத்தாச்சலத்திலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்விடத்தில் சோகத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )