BREAKING NEWS

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச கூலியை அறிவித்து அதனை சட்டமாக அறிவிக்க வேண்டும் – அகில இந்திய விவசாய சங்கத்தினர் கோரிக்கை.

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச கூலியை அறிவித்து அதனை சட்டமாக அறிவிக்க வேண்டும் – அகில இந்திய விவசாய சங்கத்தினர் கோரிக்கை.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை வலியுறுத்தி மாநில செயலாளர் பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை நாட்களை இரவு நாட்களாக அதிக படுத்த வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியல மக்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி தோஷமிட்டனர் இதில் நிர்வாகிகள் சுப்ரமணியன் தங்கதுரை சந்திரன் சிவராஜன் ரங்கராஜன் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர், பழனிச்சாமி இந்திய அரசு, மாநில அரசு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச கூலியை அறிவித்து அதனை சட்டமாக அறிவிக்க வேண்டும், நாடு முழுவதும் உள்ள உபரி நிலங்களை மீட்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், நிலசீர்திருத்த சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )