விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற விதை சான்று மற்றும் அங்ககச் சான்று துறையின் அறிவுறுத்தல்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
அந்தியூர். அம்மாபேட்டை. பவானி.டி.என் பாளையம். ஆகிய பகுதிகளில் எதிர்வரும் கார்த்திகை பருவத்தில் நிலக்கடலை விவசாயத்தினை மேற்கொள்ள விவசாயிகள் தற்பொழுது தயாராகி வருகிறார்கள்.
விவசாயிகளின் விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் தருவதில் விதைகளின் பங்கு மிக முக்கியமானது தரமான விதைகளை சரியான விலையில் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைத்திடும் வகையில் விதை சான்று மற்றும் அங்ககச் சான்று துறை அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர் விளைச்சல் ரகங்கள் விதைகளை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விவசாயிகள் தாங்கள் வாங்கி விதைத்த விதைகள் தரமற்றதாகவோ முளைப்புத் திறனில் குறைபாடு தொடர்பான புகார் ஏதேனும் பெறப்பட்டால் உடனடியாக கீழ்க்கண்ட தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு விதை சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குனர்(சென்னை) தெரிவித்துள்ளார்.
விதை ஆய்வு துணை இயக்குனர்.
ஜெயராமன்
(ஈரோடு)
9842783711
ஆசைத்தம்பி
விதை ஆய்வாளர். பவானி
9943070720