BREAKING NEWS

வீட்டின் உரிமையாளருக்கும் வாடகை தாரருக்கும் தகராறு…. வாடகைதாரர் அடித்துக்கொலை.

வீட்டின் உரிமையாளருக்கும் வாடகை தாரருக்கும் தகராறு…. வாடகைதாரர் அடித்துக்கொலை.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே ராகவா நகர் பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகர் (60) இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளன.

இதில் மூத்த மகள் திருமணம் ஆகி சொந்த ஊரான சிதம்பரத்தில் இருந்து வருவதாகவும் இரண்டாவது மகள் கிருத்திகாவுக்கு மஹேந்திரா
சிட்டியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை கிடைத்துள்ளதால் சிங்கபெருமாள் கோயில் அடுத்த செங்குன்றத்தில் ராணி என்பவருக்கு சொந்தமான வீட்டில் 10ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்து மாதம் 5,500 ரூபாய் வாடகை நிர்ணயம் செய்து சந்திரசேகர் தன் மகளுடன் ராணியின் வீட்டுக்கு வாடகைக்கு வந்துள்ளார்.

             வாடகைதாரரை கொலை செய்த வீட்டு உரிமையாளர் மகன் நரேந்திரன்.

 

இந்நிலையில் வீட்டில் போதுமான குடிநீர் வசதியும், கழிவுநீர் செல்வதற்கான வசதியும் இல்லாததால் அதை சரிசெய்து கொடுக்க தொடர்ந்து வலியுறுத்தியும் உரிமையாளர் கண்டு கொள்ளாததால் சந்திரசேகர் வாடகைக்கு வந்த 28நாளில் முன்பணமாக கொடுத்த பத்தாயிரத்தை வாங்காமலே வீட்டை காலி செய்து விட்டார்.

சந்திரசேகர் வீட்டு உரிமையாளரிடம் முன்பணமாக கொடுத்த பத்தாயிரத்தை திரும்ப கேட்டுள்ளார். இதனால் உரிமையாளர் ராணிக்கும் சந்திரசேகருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

தன்னை ஒருமையில் பேசியதாக ராணி தன் மகன் நரேந்திரனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார் நரேந்திரன் உடனடியாக வீட்டுக்கு வந்து சந்திரசேகரை கீழே தள்ளிவிட்டு முகத்திலும் மார்பிலும் கையால் குத்தியும் காலால் உதைத்தும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் மயங்கி விழுந்த சந்திரசேகர் பின் மண்டையில் பலத்த காயமடைந்த சந்திரசேகரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 

பின்பு தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஒரகடம் பகுதியில் மறைந்திருந்த நரேந்திரனை மறைமலைநகர் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு நிருபர் எம். ஷங்கர்

CATEGORIES
TAGS