வீட்டுமனை பட்டா கேட்டு வந்த பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை.. புகாரில் சிக்கியுள்ள தாசில்தார்

வீட்டுமனை பட்டா கேட்டு வந்த பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை.. புகாரில் சிக்கியுள்ள தாசில்தார் மீது விசாரணை துரிதப்படுத்தப்படுமா?
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரெகுலர் தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் இவர் ஏற்கனவே வாலாஜா வட்டாச்சியர் அலுவலகத்தில் ரெகுலர் தாசில்தாராக பணிபுரிந்த போது பல்வேறு குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்று தற்போது அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் இவர் மீது முதலமைச்சர் தனி பிரிவிற்கு புகார் கடிதம் ஒன்று சென்றுள்ளது. இந்த கடிதம் இராணிப்பேட்டை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளின் வாட்ஸ் அப் குழுக்களில் கடந்த சில நாட்களக மிக அதிக அளவில் பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
அந்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:-
திருமதி. பிரியா(பெயர் வேண்டாம்) அரக்கோணம் நகராட்சி இராணிப்பேட்டை மாவட்டம், என்ற முகவரியுடன் புகார் கடிதம் அந்த கடிதத்தில் கணவனை இழந்த இளம் பெண் ஒருவர் எழுதியது போல் உள்ளது அந்த கடிதம் உங்கள் பார்வைக்கு அந்த கடிதத்தில் பிரியா என்ற பெண் விதவையென்றும் அவர் வட்டாட்சியரிடம் வீடு கேட்டு மனு கொடுத்துள்ளதாகவும் அதற்காக விசாரனைக்கு அழைத்து அந்த இளம் பெண்ணிற்க்கு ஆதரவாக பேசி அந்த பெண்ணை ராத்திரி நேரத்தில் வட்டாட்சியர் வெங்கடேசன் அரசு வழங்கியுள்ள பங்களாக்கு வரவழைத்து சுமார் 7 முறை உடலுறவு கொண்டதால் அவர் கர்பமானதாவும் அந்த கர்பத்தை கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்து கலைத்து விட்டதாகவும், அதன் பிறகு கிராம உதவியாளர் பணிக்கு ரூ. 6, லட்சம் கேட்டதாகவும் புகாரியில் கூறப்பட்டுள்ளது. மேலும் அரக்கோணம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர்மல்க கேட்டக்கொள்கிறேன்.
இப்படிக்கு பிரியா என கையொப்பம் இடப்பட்டுள்ளது. இந்த கடிதத்திலுள்ள சங்கதிகளை கேட்டு உண்மை என்ன?. என அறிந்து கொள்ள அரக்கோணம் வட்டாட்சியர் வெங்கடேசனை கைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போது பிசியாக இருந்தது பிறகு அவர் லைன் கிடைக்கவும் அவரிடம் மேற்கண்ட சங்கதிகளை கூறி இது உண்மையா?. என கேட்ட போது,
அவர் இது அப்பட்டமான பொய் அப்படி ஒரு கேரட்டரையே நான் சந்திக்கவில்லை! இது முற்றிலும் 100% அல்ல 1000% பொய் என்றார். மேலும் எனக்கு நிறைய எதிரிகள் எங்கள் துறையில் உள்ளனர்.
அதில் யாராே நான் இரண்டாவது முறையாக ரெகுலர் தாசில்தாராக பணி செய்து வருவதால் இப்படி மொட்டை பெட்டிசன் போட்டு இருப்பார்கள் அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறினார். எது உண்மையென மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.யு. சந்திரகலா, ஐஏஎஸ்., தாசில்தார் வெங்கடேசன் மீது விசாரணைக்கு உட்படுத்தினால் உண்மை நிலவரம் என்னவென்று தெரியவரும்.
உண்மையில் அந்த இளம்பெண் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டாரா? அவ்வாறு உண்மையன்றால் அந்த பெண் தைரியமாக நேரடியாக வந்து புகார் கொடுக்க வேண்டும். அப்போது தான் சட்டபடியான நடவடிக்கை மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.
அப்படி ஒருவேளை வட்டாட்சியர் கூறுவது போல் யாராவது மொட்டை பெட்டிசன் வேண்டுமென்றே போட்டிருந்தால் அந்த நபர் யாரென்று கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், ஒன்று மட்டும் புரிகிறது நெருப்பு இல்லாமல் புகையாது என்பது மட்டும் உறுதி..!!
எது என்னவோ ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.யு.சந்திரகலா, ஐஏஎஸ்., அரக்கோணம் வட்டாட்சியர் வெங்கடேசன் மீது இளம் பெண் கூறிய பாலியல் குற்றச்சாட்டு புகாருக்கு விசாரணை மேற்கொள்ளப்படுவாரா?
அல்லது தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு சென்றுள்ள புகார் மனு மீது என்ன விசாரணை நடத்தப்பட போகிறார்கள் வருவாய்த்துறை மேல்அதிகாரிகள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்..!!