BREAKING NEWS

வீரபாண்டியில் அடிப்படை வசதி செய்து தரக்கூடிய இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் இன்று தேனி ஆட்சியரிடம் கோரிக்கை மனு.

வீரபாண்டியில் அடிப்படை வசதி செய்து தரக்கூடிய இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் இன்று தேனி ஆட்சியரிடம் கோரிக்கை மனு.

 

தேனி அருகே சிவலிங்க நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சின்னராஜ்.
இவர் இந்து முன்னணி தேனி ஒன்றிய செயலாளராக உள்ளார்.

இவர் தலைமையிலான இந்து முன்னணியினர் இன்று காலை தேனி ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

 

அப்போது, வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருகோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி இல்லாததால் ஆற்றின் கரையோரங்களிலும், பக்தர்கள் குளிக்கும் இடங்களிலும் இயற்கை உபாதைகளான மலம், ஜலம் கழித்து வருகின்றனர்.

 

இது மட்டுமின்றி பக்தர்கள் நீராடும் படித்துறை பகுதியிலும் சுத்தமில்லாமல் குப்பைகளாக உள்ளது. இதனால் சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கும் அவலம் ஏற்படுவது மட்டுமின்றி தங்களது நேத்தி கடன்களை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

 

 

மேலும் திருக்கோவில் முன்பு இலவச கழிப்பறை கட்டப்பட்டு அது திறக்கப்படாமல் மூடி உள்ளதால் இரவு நேரங்களில் கழிப்பறை சுற்றி அந்த இடத்திலேயே மலம், ஜலம் கழிக்கும் அவலமும் நடைபெறுகிறது.

மேலும் ஸ்ரீ கண்ணீஸ்வரன் முடையார் கோவிலில் விநாயகர் சன்னதியின் மேல் கூரையில் பல ஆண்டுகளாக கும்பம் இல்லாத நிலையிலே உள்ளது.

 

மேற்கண்ட விஷயங்களை சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு சரி செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன். தவறும் பட்சத்தில் இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பில் பொதுமக்களையும் பக்தர்களையும் திரட்டி திருக்கோயில் முன்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறேன் என்று வலியுறுத்தப்பட்ட மனுவை ஆட்சியர் ஷஜீவனா அவர்களிடம் வழங்கினார்கள்.

 

CATEGORIES
TAGS