வீரபாண்டி அரசு கலை(ம)அறிவியல் கல்லூரி மாணவிகள் தொடர்ந்து பேருந்து தடையின்றி இயக்ககோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தேனி மாவட்ட செயலாளர் முத்துராஜ்.
தேனி மாவட்டம்,ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலை-மயிலை ஒன்றிய கிராமப்பகுதிகளிருந்து வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மயிலாடும்பாறையிலிருந்து மாணவ மாணவிகளுக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவிகள் சுமார் 36 பேர்கள் மாணவர்கள் சுமார் 75க்கு மேற்பட்டவர்கள் இந்த பேருந்தை நம்பித்தான் கல்லூரியில் சேர்ந்தார்கள்.

ஆனால் அந்த பேருந்து வாரத்தில் மூன்று நாட்கள் பழுதாகி ஆகி விடுகிறது. மற்ற நாட்களில் டிரைவர் இல்லை.
மேலும் வீரபாண்டி கல்லூரி அமைந்துள்ள இடம் ஒரு வன பகுதி ஆகும். பேருந்து வராத நேரங்களில் கல்லூரியிலிருந்து மாணவ மாணவியர்கள், உப்பார்பட்டி விலக்கு அல்லது தப்புக்குண்டு 2-3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது.
எனவே இது சம்மந்தமாக கல்லூரி நிர்வாகத்திடம் தேனி போக்குவரத்து துறை மேலாளரிடம் பலமுறை தெரியபடுத்தியும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.

மேலும் இந்த வழித்தடத்தில் இந்த பேருந்தை தவிர வேறு பேருந்து வசதிகள் இல்லாத சூழ்நிலை உள்ளது. பேருந்து வராத நாட்களில் மாணவ மாணவிகள் கல்லூரிக்கு செல்வது இல்லை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிது.
ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களின் எதிர் காலத்தை கருதி பேருந்தை வேலை நாட்களில் தங்கு தடையின்றி இயக்க வேண்டி மாணவ- மாணவியர் சார்பாகவும் மாணவ – மாணவிகளின் பெற்றோர்களின் சார்பாக மனு அளித்தனர்.
