BREAKING NEWS

வீரம் உணவகத்தில் நடந்த குழுக்கள் போட்டியில் தேனி சேர்ந்த நபர் இருசக்கர வாகனத்தை பரிசாக வென்றார்.

வீரம் உணவகத்தில் நடந்த குழுக்கள் போட்டியில் தேனி சேர்ந்த நபர் இருசக்கர வாகனத்தை பரிசாக வென்றார்.

தேனி செய்தியாளர்; முத்துராஜ்.

 

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் வீரம் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் காளிதாஸ் என்னும் நபர். இந்த உணவகம் சின்னமனூரில் இருந்து மேகமலைக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

 

தீவிர அஜித் ரசிகரான இவர் தனது உணவகத்தில் துணிவு படம் வெற்றி பெறுவதற்காக குலுக்கல் பரிசு நிகழ்ச்சியை நடத்தி பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கினார். 

 

நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு திரைப்படம் வெற்றி பெறுவதற்காகவும் துணிவு திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதை கொண்டாடும் விதமாகவும் தனது கடையில் குலுக்கல் பரிசு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார் .

 

 

அஜித்தின் நடிப்பில் 61 வது திரைப்படமாக துணிவு படம் வெளியாக உள்ளதால், தனது கடையில் 61 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு பரிசு கூப்பன் வழங்குகிறார்.

 

அந்த கூப்பனில் மக்கள் தங்களின் பெயர் முகவரி செல்போன் நம்பர் உள்ளிட்டவைகளை எழுதி குழுக்கள் பரிசு பெட்டியில் போட வேண்டும் .

 

 இருசக்கர வாகனம் பரிசு :-

இந்தக் குழுக்கள் பரிசுப் போட்டியின் குழுக்கள் இன்று நடைபெற்றது.

 

 

முதல் பரிசாக இருசக்கர வாகனம் , இரண்டாம் பரிசாக எல் இ டி டிவி, மூன்றாம் பரிசாக வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது .

 

அதனை தொடர்ந்து சோபா செட், சைக்கிள், மிக்ஸி, வெட் கிரைண்டர், குக்கர் உள்ளிட்ட 61 வகையான பொருட்கள் பரிசுப் பொருள்களாக வழங்கப்பட்டது.

 

 

இந்த குலுக்கல் போட்டியில் பங்கேற்பதற்காக ஏராளமான மக்கள் வீரம் உணவகத்தில் 61 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி குப்பன்களை எழுதி போட்டு குலுக்கல் போட்டியில் பங்கேற்ற நிலையில், முதல் பரிசான இருசக்கர வாகனத்தை தேனியை சேர்ந்த ருத்ரதேவ் என்ற நபர் வென்றார்.

 

  அதனை தொடர்ந்து குழுக்கள் போட்டியை காண கடைக்கு வந்த பொதுமக்கள் அனைவருக்கும் இலவச ஸ்வீட் பாக்ஸும் வழங்கப்பட்டது.

 

 

நடிகர் அஜித்தின் மீது கொண்டுள்ள காதல் காரணமாக இவ்வாறு பரிசு போட்டியை நடத்தி வருவதாகவும் , இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுத்தொகை பொதுமக்களுக்கு வழங்கியதாகவும், விரைவில் நடிகர் அஜித் பெயரில் ஆசிரமம் கட்ட வேண்டும் என்பதை எனது லட்சியம் எனவும் தெரிவித்துள்ளார் கடையின் உரிமையாளர் காளிதாஸ்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )