வேடசந்தூர் பகுதியில் பல நாட்களாக சுத்தம் செய்யாமல் இருக்கும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் கழிவு நீர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருந்து வடமதுரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தட்டாரப்பட்டி பிரிவில் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ் டி வீரா. சாமிநாதன் மகன் திருமண வரவேற்பு விழாவிற்கு வருகை தர உள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருவதை முன்னிட்டு வேடசந்தூர் பகுதியை கண்ணாடி போன்று சுத்தம் செய்து வரும் அரசு துறை நிர்வாகம் பம்பரமாய் சுழன்று மக்களின் வரிப்பணத்தில் வேலை செய்து வருகிறது.

ஏழை எளிய அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதியாகவும், குடகனாற்றில் பகுதியில் அதிகளவு கழிவு நீர் கலந்து அசுத்தம் நிறைந்த பகுதியாகவும் திகழ்ந்து வருகிறது வேடசந்தூர்
ஆனால் உதயநிதி ஸ்டாலின் போன்ற வி வி ஐ பி கல் வருகை தரும் நாளை முன்னிட்டு மட்டும் சுத்தம் செய்தால் வேடசந்தூர் நகர் முழுவதும் வருடம் முழுவதும் சுத்தமாகிவிடுமா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர்
