BREAKING NEWS

வேன் கவிழ்ந்ததில் 14 பேர் காயம்; காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிய பொதுமக்கள்.

வேன் கவிழ்ந்ததில் 14 பேர் காயம்; காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிய பொதுமக்கள்.

மயிலாடுதுறையில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி  கும்பிட சென்ற பக்தர்கள் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலியமங்களம் அருகே கவிழ்ந்ததில் 14 பேர் காயம் அடைந்தனர்.

மயிலாடுதுறையில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட 16 பேர் மஹிந்திரா வேனில் புறப்பட்டனர். வேன் தஞ்சை மாவட்டம் சாலியமங்களம் அருகில் வந்தபோது ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஒரத்தில் கவிழந்தது இதில் 14 பேர் காயம் அடைந்தனர்.

 

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஒட்டுனர் கண் அயர்ந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.

CATEGORIES
TAGS