வேப்பூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முதலமைச்சர் முக. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் தமிழக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்…
நபார்டு விஃப் நிதியின் கீழ் சுமார் 2.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை தலைமை செயலகத்திலிருந்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத் தாளாளர் வெங்கடேசன், திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி,
மாவட்ட கவுன்சிலர்கள் நகர் சி சக்தி விநாயகம், ராஜரத்தினம், சமூக ஆர்வலர் கதிர்வேலு, ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கண்ணு, ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி திருஞானம், செயலாளர் தங்க வெங்கடேசன், கட்டிட பொறியாளர் சரவணபவா மற்றும் வேளாண்மை துணை இயக்குனர், மற்றும் வேளாண்மை துறை அரசு ஊழியர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.