BREAKING NEWS

வேப்பூரில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் விளக்கப் பொதுக்கூட்டம்

வேப்பூரில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் விளக்கப் பொதுக்கூட்டம்

கடலூர் மேற்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேப்பூர் கூட்ரோட்டில், தலைமை செயற்குழு உறுப்பினரும் நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான பாவாடை கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் துரை. கருப்புசாமி வரவேற்புரை ஆற்றினார். மேற்கு மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவெ. கணேசன், தலைமைக் கழக பேச்சாளர் வைர. புரட்சிதாசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

 

மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய அவைத் தலைவர் பால் கருப்பையா, மாவட்ட கவுன்சிலர் நகர் சக்தி வினாயகம், ஒன்றிய துணைச் செயலாளர்கள் அண்ணாதுரை, மாரிமுத்தாள் குணா, அன்புக்குமரன், ஒன்றிய பொருளாளர் வெங்கடாசலம், மாவட்ட பிரதிநிதிகள் அண்ணாதுரை, சேகர், மாவட்ட நெசவாளர் அணி சுப்பு அன்பழகன்,

 

மாவட்ட கலை இலக்கிய அணி ஜெயபால், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்க. நாராயணசாமி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எம்விஎல் தனசேகரன், நகர் பாபு, குணசேகரன், ராஜா, துளசி மணி, ஒன்றிய பொறியாளர் அணி செந்தில்குமார், ஒன்றிய மாணவரணி நிர்வாகிகள் மாரிமுத்து மற்றும் ராஜவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

கிளைச் செயலாளர்கள் சேப்பாக்கம் தண்டபாணி, ஏழுமலை, கீழக்குறிச்சி முருகேசன், பெரியநெசலூர் மண்ணாங்கட்டி, சசிகுமார், நகர் முருகேசன், இலங்கியனூர் ரவிசங்கர், ராஜா, சிறுநெசலூர் ரஜினிகாந்த், வேல்முருகன், மேமாத்தூர் ஞானவேல், சுப்பிரமணியன், முருகேசன், பூலாம்பாடி நாராயணசாமி, காமராஜ்,

 

வேல்முருகன், மாளிகைமேடு வெங்கடேசன், திருப்பெயர் சிவக்குமார், மருதை, காட்டுமைலூர் கதிர்வேல், அன்பு நிதி, பிஞ்சனூர் செல்வராசு, பன்னீர்செல்வம், உள்ளிட்ட பல்வேறு கிராம கிளை செயலாளர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.வேப்பூர் கிளை செயலாளர் மோகன்ராஜ், அரிஈசன், விஜயன் ஆகியோர் நன்றி உரையாற்றினர்.

CATEGORIES
TAGS