வேப்பூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.!
கடலூர் மாவட்டம் வேப்பூர் சுற்றியுள்ள பூலாம்பாடி, சிறுநெசலூர், பெரியநெசலூர், சேப்பாக்கம், திரு பயிர், நாரையூர், நகர், கோ. கொத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த நெற்பயிர்களை கொள்முதல் செய்ய வேப்பூர் கிராமத்தில் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் தற்காலிக நேரடி கொள்முதல் நிலையம் திறந்து செயல்பட்டு வந்தது அதன்படி இந்த ஆண்டிற்கான சம்பா பருவத்திற்கு விவசாயிகளின்.,,
நெல்லை அரசு கொள்முதல் செய்யும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திமுக ஒன்றிய துணை செயலாளர் மாரிமுத்தாள் குணா முன்னிலையில், வேப்பூர் முன்னாள் கவுன்சிலர், கிளைச் செயலாளர் மோகன்ராஜ் விவசாயிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அப்போது கொள்முதல் நிலைய எழுத்தாளர் இளங்கோவன், வேப்பூர் திமுக கிளை செயலாளர்கள் அரிஈசன், விஜயன், வேப்பூர் குணசேகரன், ஐவதகுடி நாகேஷ், புடையூர் ராஜவேல், சிறுநெசலூர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.