BREAKING NEWS

வேப்பூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேப்பூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

கடலூர் மாவட்டம்,

பாஜக மகளிர் அணி நிர்வாகிகளான குஷ்பூ, கௌதமி குறித்து ஆபாசமாக பேசியதாக திமுக நிர்வாகி சாதிக் என்பவர் மீது புகார் எழுந்தது, இதையடுத்து சாதிக்கை கைது செய்யக்கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

 

இந்நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலை உள்ளிட்ட பாஜவினர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலூர் மாவட்டம் வேப்பூர் நான்கு முனை சந்திப்பில் கட்சியின் நல்லூர் ஒன்றிய தலைவர் கந்தன் தலைமையில் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொதுச் செயலாளர் ஆறுமுகம், விவசாய அணி மாவட்ட துணைத் தலைவர் ஏபிஆர் ரெங்கராஜன், ஒன்றிய மகளிரணி தலைவி புவனேஸ்வரி, இளைஞர் அணி தலைவர் சீனிவாசன், ஒன்றிய பொருளாளர் செல்வகுமார், மத்திய நலத்திட்ட பிரிவு நகர் பாலகிருஷ்ணன், ஓபிசி அணி செயலாளர் ரேணுகா, இளைஞரணி செயலாளர் பிரகாஷ்,

 

 

பிறமொழி மாவட்டத் துணைத் தலைவர் பரமேஸ்வரன், ஒன்றிய துணைத் தலைவர்கள் வெங்கடேசன், யுவராஜ், சிவக்குமார், ரவிச்சந்திரன், மாளிகை ஆறுமுகம், வேப்பூர் ரஜினி உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )