வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கீழக்குறிச்சி, மாளிகைமேடு உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளான மாளிகை மேடு, ஆதியூர், கொளப்பாக்கம், ஐவதகுடி உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் முப்பருவமும் நெல் பயிரிட்டு வருகிறது.
இந்த நெற்பயிர்களை கொள்முதல் செய்ய கீழக்குறிச்சி கிராமத்தில் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் தற்காலிக நேரடி கொள்முதல் நிலையம் திறந்து செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான சம்பா பருவத்திற்கு நெல்கொள்முதல் நிலையத்தை திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்க நாராயணசாமி தொடங்கிவைத்தார்.
இதில் மாவட்ட கவுன்சிலர் சக்திவினாயகம், தங்கவேலு, ராமமூர்த்தி,சிலம்பரசன்,மணிகண்டன், ராமதாஸ், கொள்முதல் நிலைய எழுத்தர் கருப்பையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES கடலூர்
TAGS கடலூர் மாவட்டம்கடலூர் வேப்பூர்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்நேரடி நெல் கொள்முதல் நிலையம்முக்கிய செய்திகள்