வேப்பூர் கூட்ரோடு குட்டை நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.
அம்பேத்கர் படிப்பகத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து.. போராட்டத்தில் ஈடுபட்ட விசிக ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், வேப்பூர் கூட்ரோடு பகுதியில் உள்ள குட்டை நீர்நிலை ஆக்கிரமிப்பு , வணிக வளாகங்கள், குடியிருப்புகள் அப்புறப்படுத்தக்கோரி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு,
வருவாய்த்துறை அறிவுறுத்தலின் பேரில் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த வணிக நிறுவனங்கள், கடைகள், குடியிருப்பு வாசிகளிடம் ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் வேப்பூர் கூட்ரோடு பகுதியில் உள்ள குட்டைப் பகுதி நீர்நிலை ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் மற்றும் கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது,அப்பகுதியில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக உள்ள அம்பேத்கர் படிப்பக கூரை பகுதியை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்தோஷ் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் மழையில் நனைந்தபடி, அமர்ந்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் .
பின்பு, அங்கிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் உடன்பாடு ஏற்படாத நிலையில் விசிக ஒன்றிய செயலாளர் மற்றும் மூன்று பேரை வேப்பூர் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதனால் ,அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும், வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.