வேப்பூர் பகுதியில் வழிபறி மற்றும் செல்போன் திருட்டில் ஈடுபட்ட மூன்று மாணவர்கள் கைது.! போலீசார் விசாரணை.

– கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமையில் இயங்கி வரும் வாரச்சந்தையின் பொழுது அதிக அளவில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் இதனால் வார சந்தையில் வாராவாரம் இருசக்கர வாகன திருட்டு மற்றும் வழிப்பறி செல்போன் திருட்டு போன்றவை நடைபெற்று வந்தன.
இந்நிலையில் நேற்று போலீசார் வாரச்சந்தையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது மூன்று மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக சென்றனர் இதைப் பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த சிறுப்பாக்கம் எஸ் ஐ ஜம்புலிங்கம் அவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
அதனையும் பொருட்படுத்தாமல் அவர்கள் அதிவேகமாக விரைந்து கீழ் ஒரத்தூர் வழியாக சென்றனர் இதை அறிந்த எஸ்ஐ ஜம்புலிங்கம் கீழ் ஒரத்தூர் பகுதியில் உள்ள தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு தகவல் கொடுத்தனர் இதனை அடுத்து அப்பகுதி ஊர் மக்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதியில் வந்த அந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து எஸ்ஐ, ஜம்புலிங்கத்திடம் ஒப்படைத்தனர்.
அவர்களை பிடித்து வேப்பூர் காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை செய்த போது வேப்பூர் கூட்டு ரோட்டில் வயதான பெண் முதியவரிடம் அவரது பையை பிடுங்கிக் கொண்டு அதில் உள்ள ரூபாய் 500 யை எடுத்துக்கொண்டு சென்றதை ஒப்புக்கொண்டனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு வழக்கில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்குரவாரி கிராமம் மேல தெருவில் வசிக்கும் ராமச்சந்திரன் மகன் மகேந்திரன் 17 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் ஆனந்தராஜ் 17 மற்றும் கண்ணன் மகன் மணிகண்டன்17 ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.