வேலூரில் இயற்கை கருத்தரிப்பு மையம், ஆயுஸ் ஆஸ்பத்திரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வேலூர் டவுன்ஹாலில் இன்று தென்னிந்திய பன் மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் (சிம்கோ) சார்பில் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதன் மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கேரளா ஆந்திரா மாநிலங்களில் (சிம்கோ) இந்த வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருத்தணி ஆகிய இடங்களில் இதன் மூலம் பொது மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு இயற்கை முறையில் சிகிச்சை அளித்து வருகிறோம்.
வேலூரில் ஆயுஸ் ஆஸ்பத்திரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதில் முற்றிலும் இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கப்படும். இங்கு இந்தியாவிலேயே முதன்முறையாக இயற்கை முறையில் கருத்தரிப்பு மையம் தொடங்கப்படும் என்றார்.
வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் அமுதா மற்றும் தமிழ்மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தற்போது செய்ய வேண்டிய திட்ட பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.