வேலூரில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் சேவை 5ம் தேதி நடைபெறுகிறது. எனவே பக்தர்கள் வசதிக்காக வேலூர் அரசு போக்குவரத்து கழகத்தின் மண்டலம் சார்பில் வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து 50 சிறப்பு பேருந்துகளும், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் இருந்து 20 சிறப்பு பேருந்துகளும், திருப்பத்தூரில் இருந்து 30 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 100 பேருந்துகள் மேல்மலையனூருக்கு இயக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகள் மற்றும் பக்தர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
TAGS velloreViluppuramதமிழ்நாடுதமிழ்நாடு போக்குவரத்துமாவட்ட செய்திகள்முக்கிய செய்திகள்விழுப்புரம்விழுப்புரம் மாவட்டம்