BREAKING NEWS

வேலூரில் உள்ள கணியம்பாடி பகுதியில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை 2 நாட்களில் அகற்றவும், வரி பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கவும் கலெக்டர் உத்தரவு !

வேலூரில் உள்ள கணியம்பாடி பகுதியில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை 2 நாட்களில் அகற்றவும், வரி பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கவும் கலெக்டர் உத்தரவு !

வேலூர் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு கணியம்பாடி பஸ் நிறுத்தம், ஆரணி சாலை, புதூர் சாலை மற்றும் அமிர்தி சாலை உள்ளிட்ட பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர்.

 

மேலும் பல ஆண்டுகளாக சில கடைக்காரர்கள் வாடகை செலுத்தாமல் இருப்பதாக ஆட்சியர் குமாரவேல் பாண்டியனுக்கு புகார்கள் வந்தது.  அதன்பேரில் காலை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

 

வேலூர்- ஆரணி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் நடைபாதையை ஆக்கிரமித்து கடை விரிவாக்கம் செய்துள்ள உரிமையாளர்களுக்கு, 2 நாட்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு விதித்து உத்தரவிட்டார் கடைகளுக்கு சீல் அதோடு வரி பாக்கி செலுத்தாமல் இருக்கும் கடைகளுக்கு சீல் வைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

மேலும் கணியம்பாடி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாளர் பற்றாக்குறை உள்ளது. பல்வேறு பணிகள் பாதிப்பதால் அதனை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

 

கணியம்பாடி பஸ் நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் நின்று செல்ல வேண்டும் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கணியம்பாடி வரை அரசு டவுன் பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

 

இதற்கு பதில் அளித்த ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் இந்த ஆய்வின்போது வேலூர் சப்-கலெக்டர் கவிதா, ஒன்றியக் குழு தலைவர் திவ்யா கமல்பிரசாத், தாசில்தார் செந்தில், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகராஜ், கவுரி, ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரவி, ஒன்றிய கவுன்சிலர் விஸ்வநாதன்,

 

துணை தலைவர் ஷகிலா முரளி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர்ராஜன், வருவாய் ஆய்வாளர் சந்தியா, ஊராட்சி செயலாளர் உதயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் சுரேஷ்குமார்.

CATEGORIES
TAGS