வேலூரில் சதம் அடித்தது கோடை வெயில்!

வேலூர் மாவட்டம்:
கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் நிகழாண்டு முதன்முதலாக திங்கள்கிழமை வெயில் நூறு டிகிரி ஃபாரன்ஹீட் அளவை கடந்துள்ளது.
தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழகத்தில் வெயில் அதிகம் பதிவாகும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் முன்னணியில் உள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதியில் கொளுத்தத் தொடங்கும் வெயில் ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும். கடந்தாண்டுகளில் அதிகபட்சமாக 112 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகி இருந்தது.
அதன்படி, நிகழாண்டு வெயில் தாக்கம் கடந்த பிப்ரவரி மாதமே அதிகரிக்கத் தொடங்கியது. பிப்ரவரி 15}ஆம் தேதிக்கு பிறறகு வெயில் அளவு படிப்படியாக உயரத் தொடங்கியது. தொடர்ந்து, மார்ச் மாத தொடக்கத்தில் 90 டிகிரியை கடந்தது. பின்னர் படிப்படியாக வெயில் அதிகரித்து ஞாயிற்றுக்கிழமை 95.5 டிகிரியாக பதிவாகியிருந்தது.
இந்நிலையில், திடீரென திங்கள்கிழமை வேலூர் மாவட்டத்தின் வெயில் அளவு நூறு டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து 100.4 டிகிரியாக பதிவானது. அதன்படி, வேலூரில் வெயில் அளவு 100.4 டிகிரியாக பதிவாகி இவ்வாண்டின் முதல் சதத்தை எட்டியுள்ளது. முன்னதாக, காலை 11 மணி முதலே கொளுத்த தொடங்கிய வெயில் அளவு பகல் 1 மணிக்கு உச்சத்தை தொட்டது.
இதனால், சென்னை } பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். வெயில் அளவு அதிகரிக்கத் தொடங்கியதால் பகலில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைறயத் தொடங்கியுள்ளது. பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் இரவில் புழுக்கம் அதிகரித்துள்ளது.
கோடைக்காலம் தொடங்கியதால் வேலூர் மாவட்டத்தில் ஆங் காங்கே பழச்சாறுக்கடைகள், கரும்புச்சாறு, கேழ்வரகு கூழ், தர்பூசணி, முலாம்பழம் போன்றற உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.