வேலூரில் தி பிரிட்ஜ் அறக்கட்டளை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா.!!
வேலூர் மாவட்டம் காட்பாடி ஸ்ரீஜனனி பேலஸ் காந்திநகர் பகுதியில் நடைபெற்ற 2023 சர்வதேசமகளிருக்கான விருது விழா பிரிஜ் அறக்கட்டளை நிறுவன தலைவர் மதிவாணன் மற்றும் பாக்கியராஜ் தலைமையில் குத்துவிளக்கேற்றி நாட்டுப்பண் பாடி நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து சாதனை புரிந்த அரசியல், சமூக சேவை, கல்வியாளர், சிறந்த உடற்பயிற்சியாளர், சிலம்பம், சமூக சேவை பெண்கள், 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நீதிபதி தலைவர் வட்ட சட்டப் பணிக்குழு மக்கள் நீதிமன்றம் தமிழ்ச்செல்வி கலந்து கொண்டு பெண்கள் இந்நாட்டு கண்கள் என்றும் அனைத்து துறையிலும், பெண்கள் சமம் என்று பெண்களைப் போற்றி சிறப்புரையாற்றினார். காட்பாடி காவல்துறை R. சேகர் ADSP காட்பாடி இன்ஸ்பெக்டர் சுலோச்சனா, அரியூர் ரேகா SI, முத்துரங்கம் கலைக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய ஆசிரியர் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருதினை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்கள் பேசியதாவது பெண்கள் சுதந்திரமாகவும் ஆண்களுக்கு சமம் எனவும் பேசினார், வழக்கறிஞர் பிரசிடெண்ட் காட்பாடி பார் கவுன்சிலிங் பாலு வெங்கடாசலம், கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியின் தி பிரிட்ஜ் அறக்கட்டளையின் செய்தி மாடல் வெளியிட்டு விழா நடைபெற்றது, வழக்கறிஞர் ஜாயிண்ட் செகரட்டரி ஆப் பார் அசோசியேசன் J.காஞ்சனா அறிவழகன் கலந்துகொண்டு தி பிரிட்ஜ் அறக்கட்டளையின் செய்தி மடலை வெளியிட்டு வழக்கறிஞர் அச்சம் தவிர் பவுண்டேஷன் நிறுவன தலைவருமான ஜெய் ஸ்ரீ தேவி சம்பத் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
மேலும் 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, சமுக ஆர்வலர் ராஜ்பாபு, சுரேஷ்குமார், கலந்துகொண்டு வரவேற்புரை கூறி தமிழ்நாடு பெண் சாதனையாளர் விருது வழங்கினார். வேலூர் திமுக மாமன்ற உறுப்பினர் 53 வது வார்டு மாநகராட்சி பாபி கதிரவன், கலந்து கொண்டு வாழ்த்துரை கூறினார்கள். தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு சட்டவிழிப்புணர்வு இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.பாக்கியராஜ், கலந்து கொண்டு வாழ்த்துரை கூறியும் தமிழ்நாடு பெண் சாதனையாளர் விருது வழங்கினார்.
ஒருங்கிணைந்த மாவட்டங்களிலிருந்து வருகைதந்துள்ள சமூக சேவை மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களை தேர்வு செய்து தமிழ்நாடு பெண் சாதனையாளர் விருதுகள் 2023 வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தி பிரிட்ஜ் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் T.மதிவாணன் சதீஷ்குமார், சசிகலா CEO, நன்றியுரையுரையாற்றினார், விழா இறுதியில் தேசிய கீதம் பாடி விழா நிறைவுபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய நீதி, காவலர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள், சாதனை பெண்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.