வேலூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணி, 270 பேர் சீருடையில் பங்கேற்ப்பு. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட எஸ்பி தலைமையிலான 420 காவலர்கள்.

வேலூர் மாவட்டம்;
நீதிமன்ற உத்தரவு படி தமிழகத்தில் இன்று சுமார் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெற்றது.
இதில் வேலூர் மாவட்டத்தில் வேலூர் சலவன்பேட்டையில் உள்ள ஆனைகுலத்தம்மன் கோவில் அருகே இருந்து RRS அணிவகுப்பு ஊர்வலம் துவங்கியது. இதில் ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்த 270 பேர் கலந்துக் கொண்டனர்.
இந்த பேரணியானது கொசப்பேட்டை, லட்சுமிபுரம், பூஞ்சோலை, பங்களா தெரு, சோலா புரியம்மன் கோவில் தெரு, ஆரணி சாலை, அண்ணா சாலை வழியாக அண்ணா கலையரங்கம் வரை சென்று நிறைவடைந்தது.
அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் வேலூர் எஸ்.பி ராஜேஷ் கண்ணன் தலைமையில் சுமார் 420 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையிலான வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் அண்ணா கலையரங்கம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்ற உள்ளது.
ஆர்எஸ்எஸ் பேரணியின் போது கம்பு உள்ளிட்ட காயம் ஏற்படுத்தும் பொருட்களை பயன்படுத்தக் கூடாது மதம் சார்ந்த கோஷங்கள் பாடல்களை பாடக்கூடாது என தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு விதித்ததன் அடிப்படையில் இந்த கட்டுப்பாடுகளின் அடிப்படையாகக் கொண்டு ஊர்வலம் நடைபெற்றது.
பேரணியின் போது ஆரணி சாலை, அண்ணா சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.