வேலூரில் நடைபெற்ற தீ தொண்டு நாள் விழிப்புணர்வு பேரணி. விழிப்புணர்வு பதாகைகளுடன் 100க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு.
14.04.2023 முதல் 20.04.2023 வரை தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தொண்டு நாள் வார விழா கடைபிடிக்கப்படும் சூழலில் இன்று வேலூர் மாவட்ட தீயணைப்பு துறையினர் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணியை தீயணைப்புத்துறை வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கிரீன் சர்க்கிள், காமராஜர் சிலை, பழைய பேருந்து நிலையம், அண்ணா சாலை வழியாக வேலூர் தீயணைப்பு நிலையம் வரை இப்பேரணி நடைபெற்றது.
இதில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு தீயணைப்புத் துறையினர், கல்லூரி தேசிய மாணவர் படையினர் (NCC) உட்பட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணியின் போது தீ விபத்தை தடுப்பது மற்றும் கையால்வது குறித்த துண்டு பிரசுரங்கள் தீயணைப்பு துறையினர் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.