வேலூரில் நள்ளிரவில் பட்டாக்கத்தியை வைத்து பிறந்தநாள் கேக் வெட்டி நடுரோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடிய இரண்டு இளைஞர்கள் கைது.
அறம் செய்தியின் எதிரொலி அதிரடியாக களத்தில் இறங்கிய காவல்துறை…!!
வேலூர் மாவட்டம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரிக்கை.
வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் ஓட்டலின் எதிரே 11.07.2023 – ம் தேதி நள்ளிரவு 12.00 மணியளவில் அவ்வோட்டலில் பணிபுரியும் பரமக்குடியைச் சேர்ந்த பூவரசன் (25) என்பவரின் பிறந்தநாளை கொண்டாட அவனது நண்பணான காட்பாடியை அடுத்த L.G.புதூர் பகுதியைச் சேர்ந்த சிவா (21) என்பவரின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு அச்சுருத்தல் ஏற்படுத்தும் வகையில் ஓட்டலில் தேங்காய் வெட்டும் கத்தியைக் கொண்டு சாலையோரத்தில் பைக் மீது கேக் வைத்து கத்தியால் கேக் வெட்டியும், பட்டாசுகளை வெடிக்கச்செய்து சாலை வீசி அதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து செய்தி அறம் செய்தியில் வெளியான நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.மணிவண்ணன் அவர்களின் உத்தரவின் படி காட்பாடி காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமையிலான காவல் துறையினர் இருவரையும் கைது செய்து விசாரனை மேற்கொண்டு இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கடுமையாக எச்சரித்துள்ளார்.