BREAKING NEWS

வேலூரில் மகனுக்கு வேலைவாய்ப்பு கேட்டு மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்த தந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு.

வேலூரில் மகனுக்கு வேலைவாய்ப்பு கேட்டு மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்த தந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு.

மனு அளிக்க காத்திருந்த பொது மக்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் உள்ளே அமர்ந்திருந்த அதிகாரி ஒருவர் குறட்டை விட்டு உறங்கும் காட்சி வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

 

 

வேலூர் பெருமுகை பகுதியை சேர்ந்தவர் 60 வயதான மேசாக். இவரது மகன் சாம்ராஜ் (DME) டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை தேடி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாரந்தோறும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில்,..

 

 

தனது மகன் சாம்ராஜுக்கு வேலை வாய்ப்பு கேட்டு மனு அளிப்பதற்காக இன்று காலை மேஷக் மற்றும் அவருடைய மகன் சாம்ராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளனர். தந்தை மேஷாகை நிழலில் அமர வைத்து விட்டு மகன் சாம்ராஜ் மனு அளிப்பதற்காக அதனை பதிவு செய்யும் வரிசையில் காத்திருந்தபோது திடீரென தந்தை மேஷாக் மயங்கி சரிந்து விழுந்து சுயநினைவற்று இருந்துள்ளார்.

 

இதனைக் கண்ட பொதுமக்கள் மகன் சாம்ராஜிற்கு தகவல் தெரிவித்து அருகில் இருந்த 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேஷத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தேரிவித்துள்ளனர். 

 

 

குறை தீர்வு கூட்டத்தில் மகனுடன் மனு அளிக்க வந்த தந்தை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து மேஷாக்கின் உறவினர்களிடம் கேட்டபோது அவருக்கு எந்தவிதமான நோய் பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

உயிர் நட்புக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

ஆண்டு முழுவதும் வேலூர் மாவட்டத்தில் வெயில் நிலவி வரும் சூழலில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து கடந்த சில நாட்களாக 104 டிகிரி ஃபாரனிட் அளவுக்கு மேல் வெயில் கொளுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. வெயிலிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் அதிகமான நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

மனு அளிக்க வந்த பொதுமக்களில் ஒருவர் காத்திருந்து உயிரிழந்த நிலையில் குறை கேட்டு கூட்டத்தில் அமர்ந்திருந்த அதிகாரிகளில் ஒருவர் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கும் காட்சி காம்போரை ஆதங்கத்தில் ஆழ்த்தியது. 

CATEGORIES
TAGS