BREAKING NEWS

வேலூரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!  

வேலூரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!   

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கன்சால்பேட்டை, இந்திரா நகர், காந்தி நகர், வீரஆஞ்சநேயர் கோயில் தெரு உள்ளிட்ட பல இடங்களில் மழை நீருடன், கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக பொதுமக்கள் வீடுகளுக்குள் இருந்து வெளியில் வர இயலாமல்.கடும் அவதிக்குள்ளாயினர்.

அவர்களை பாதுகாப்பான முறையில் அந்த வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தி ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களையும் தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதையும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா உடன் சென்றார்.

மாவட்ட ஆட்சியர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் திடீரென முழங்கால் அளவு தேங்கியுள்ள கழிவு நீருக்குள் திடீரென இறங்கி நடக்கத் தொடங்கியதும்

வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் திடீரென அதிர்ச்சி அடைந்து அவர்களும் தங்களது பங்குக்கு கலெக்டரை பின்தொடர்ந்து கழிவு நீரில் இறங்கி நடக்க தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வீடுகளில் தண்ணீர் ஈரம் கசிந்து சுவர்களில் இருந்தால் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

சுவிட்சுகளை தொட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு ஆட்சியர் தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.

CATEGORIES
TAGS