BREAKING NEWS

வேலூரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வேலூர் சைதாப்பேட்டை உள்ள ஆரோக்கியா மாதா கோவில் வளாகத்தில் வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி 36 வது வார்டு காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.ஜி.ஆர் கௌசி தலைமையில் நடைபெற்றது.

 

 

இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.டீக்காராமன் மாநில பொதுச் செயலாளர் S/C துறை எஸ்.சித்ராஞ்சன் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் எச்.கதிர்வேல் மத நல்லிணக்க தலைவர்கள் ஆரோக்கிய மாதா கோவில் பங்குத்தந்தை அ.எட்வர்ட் பூல்பாவடி ஐ.எம்.கே.பாபாஜி அயிலாச்சார்யா மடம் தேவதாஸ் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு மத நல்லிணக்க இப்தார் நோன்பினை திறந்து வைத்தனர்.

 

 

இதில் காட்பாடி ஒன்றிய தலைவர் ஜார்ஜ் என்கின்ற இளங்கோவன் காங்கிரஸ் காட்பாடி வடக்கு ஒன்றிய தலைவர் ஜே.கே.கணேஷ், வேலூர் மாநகர மாவட்டத் தலைவர் சிறுபான்மை துறை வாஹித் பாஷா, INTUC-TCTU வேலூர் மாவட்ட தலைவர் பிரேம்குமார்.

 

மாவட்ட சிறுபான்மை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம் அலி, நான்காவது மண்டல தலைவர் ஐ.பி.ரகு வேலூர் மாநகர மாவட்ட துணைத் தலைவர் S/Cதுறை எம்.ஆர்.ரமேஷ் மண்டல தலைவர் பாலகுமார், ஜான்பீட்டர், உட்பட பலர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS