வேலூரில் முட்டை விலை கடும் உயர்வு பொதுமக்கள் கடும் பாதிப்பு!

வேலூர் மாவட்டத்தில் முட்டை ரூபாய் 5க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கடந்த இரண்டு வாரங்களாக மெல்ல விலை உயர்ந்து ரூபாய் 6.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு காரணம் நாமக்கல் கோழிப்பண்ணை வரலாற்றில் முதல் முறையாக முட்டை கொள்முதல் விலை ரூபாய் 6ஐ தொட்டுள்ளது என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் புதிய உச்சமாக ரூபாய் 6.5 காசுகள் அதிகரித்தது. அதன் விளைவு தான் இதன் எதிரொலியாக உள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கோழி தீவன மூலப்பொருள்களின் விலை உயர்வு முட்டையின் விலை ஏற்றத்திற்கு காரணம் என பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர் என முட்டை வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. கொள்முதல் விலை அதிகரிப்பால் சில்லறை விற்பனையில் ஒரு முட்டை ரூபாய் 7 முதல் 8 வரை விற்பனையாக வாய்ப்புள்ளது என்றும் மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் ரூபாய் 6.60 க்கு ஒரு முட்டை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் அசைவ பிரியர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
