வேலூரில் 1035 நாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து உலக சாதனை.
வேலூரில் 1035 நாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து ஒரேநேரத்தில் உலக சாதனை முயற்சி நமது இந்திய தேசத்தின் சந்திராயன் வெற்றிக்காக இந்த புதிய முயற்சியை மேற்கொண்டனர்.
வேலூர் மாவட்டம் வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் வேலூர் நாட்டிய கலைஞர்கள் சங்கமம் சார்பில் உலக சாதனை முயற்சியாக 1035 நாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து நேதாஜி விளையாட்டு அரங்கில் சுமார் 16 நிமிடங்கள் மூன்று வினாடிகளில் நடனங்கள் ஆடி சாதனை படைத்தவனர்.
இது உலக சாதனை புத்தகத்தில் தற்போது இடம்பெற்றுள்ளது. சாதனை படைத்த இந்த சாதனையை மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு சான்றுகள் வழங்கினார் சந்திராயன் ராக்கெட் இறக்கியதை நினைத்து அந்த விஞ்ஞானிகளுக்கு நன்றி கடன் செலுத்தவும் அவர்களை பாராட்டும் விதமாகவும் இந்த நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுமதி பெற்றோர்கள் பொதுமக்கள் இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் வித்தியாசமான தேசப்பற்று பாடல்களை அமைத்து நடனம் ஆடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.