BREAKING NEWS

வேலூரில் 5070 இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட அரிசி நெய் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரூ.200 பணம் சொந்த செலவில் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

வேலூரில் 5070 இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட அரிசி நெய் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரூ.200 பணம் சொந்த செலவில் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

5070 இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட பரிசு பொருட்கள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தனது சொந்த செலவில் வழங்கினார்.

வேலூர் மாவட்டம் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் அவரின் சொந்த செலவில் ரம்ஜானை முன்னிட்டும் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த 70 ஆவது அகவையை கொண்டாடும் வகையில் இஸ்லாமிய மக்கள் 5070 பேருக்கு அரிசி நெய் வெங்காயம் பூண்டு மற்றும் இறைச்சி வாங்குவதற்காக தலா ரூ.200 ரொக்கப்பணம் வழங்கும் விழாவானது நடந்தது.

 

 

இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கலந்துகொண்டு இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் பொருட்கள் மற்றும்.200 பணத்தினை வழங்கினார் இந்த விழாவில் வேலூர் மாநகர மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் முன்னாள் அமைச்சர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இஸ்லாமிய மக்கள் நீண்ட வரிசையில் நின்று ரம்ஜான் பரிசு பொருட்கள் மற்றும் பணத்தினை பெற்று சென்றனர்.

 

 

இவ்விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பேசுகையில் கலைஞர் முதல் தற்போதுள்ள தமிழக முதல்வர் வரையில் இஸ்லாமிய மக்களுக்கு தேவையான பொருட்களை ரம்ஜானை கொண்டாட வழங்கியுள்ளோம் திமுக என்றும் இஸ்லாமிய மக்களுக்காக தாயுள்ளத்துடன் பாசத்துடனும் இருக்கும் இயக்கம் அதற்காக தான் ரம்ஜானை கொண்டாடும் வகையில் அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கியுள்ளனர் என்று பேசினார்.

CATEGORIES
TAGS