வேலூரில் 6 தாசில்தார்கள் பணியிடம் மாற்றம்!!

வேலூர் குடியாத்தம் தாலுக்கா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நெடுமாறன் வேலூர் வட்ட வழங்கள் அலுவலராகவும், அங்கு பணியாற்றிய பூமா வேலூர் வருவாய் கோட்ட அலுவலக நேர்முக உதவியாளராகவும்,
அங்கு பணியாற்றிய நரசிம்மன் வேலூர் முத்திரை கட்டண தாசில்தார் ஆகவும், தமிழ்நாடு மாநில வாணிபக்ககழக வேலூர் கிடங்கு மேலாளர் சாமுண்டீஸ்வரி ராணிப்பேட்டை மாவட்ட சிப்காட் நில எடுப்பு தாசில்தார் ஆகவும்,
குடியாத்தம் தாலுக்கா ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாரர் சரவணன் அங்கேயே சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆகவும் பணியிடம் மாற்றும் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குமரவேல் பாண்டியன் பிறப்பித்துள்ளார். புதிய பணியிடத்தில் அனைத்து தாசில்தாரர்களும் உடனடியாக சேர வேண்டும்.
இல்லையென்றால் அரசு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும். பணியிட மாறுதல் குறித்து மேல் முறையிட்டோ அல்லது விடுப்பு விண்ணப்பமோ ஏற்றுக்கொள்ள மாட்டாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.