வேலூர்மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு.
தென் பென்னை பாலாறு இணைப்பு திட்டம் ஆமாம் ஆய்வில் தான் உள்ளது நந்தன் கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அது எவ்வளவு என தெரியவில்லை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளான மேல்நிலை நீர் தேக்க தொட்டி சாலை பணிகள் பாதாள சாக்கடை பணிகள் போன்றவற்றை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் காட்பாடி, கல்புதூர், காந்தி நகர், உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கல்புதூர் ராஜூவ் காந்தி நகரில் கட்டப்பட்ட அம்ருத் நீர் பணிகள் கட்டி முடிக்கப்பட்டுஒப்பந்ததாரர் ஓடிவிட்டார் ஆனால் அங்காங்கே தண்ணீர் உடைந்து வீணாகிறது என அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டினார்கள் இதற்கு அமைச்சர் கே.என்.நேரு ஒப்பந்ததாரர் பணி முடிந்துவிட்டதாக ஓடிவிட்டார் என கூறினார்.
இந்த ஆய்வின்போது வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேலூர் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி வடக்கு பகுதி செயலாளர் வன்னிய ராஜா தெற்கு பகுதி செயலாளரும் வேலூர் மாநகராட்சி துணை மேயருமான சுனில் குமார் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தென் பென்னை பாலாறு திட்டம் இணைப்புகாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறுவது உண்மை தான் ஆய்வு தான் நடக்கிறது என துரைமுருகன் பதில் அளித்தார் மேலும் நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அது எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரியவில்லை செயல்படுத்தப்படும் என்று கூறினார்.