BREAKING NEWS

வேலூர், அகரராஜாபாளையம்  கிராம  குடியிருப்புக்குள் நுழைந்த சுமார் 9 அடி நீளம் கொண்ட மலை பாம்பு.

வேலூர், அகரராஜாபாளையம்  கிராம  குடியிருப்புக்குள் நுழைந்த சுமார் 9 அடி நீளம் கொண்ட மலை பாம்பு.

 

தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த பொதுமக்கள்.

மலைபாம்பு மீட்டு செல்ல வராத வனத்துறை அதிகாரிகள்.

 

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த அகரராஜாபாளையம் கிராமத்தில் இரவு 8 மணியளவில் அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் சுமார் 9 அடி நீளம் கொண்ட மலை ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது.

 

இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனே தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

ஆனால், தகவல் கொடுத்தும் அவர்கள் வரவில்லை என பொதுமக்கள் மூலம் குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், செல்போன் மூலம் தகவல் கொடுத்தாலும் சரியான பதில் அளிக்காமல் தட்டிகழித்து விடுவதாக கூறப்படுகிறது.

 

ஏற்கனவே, கடந்த வாரம் இதே பகுதியில் மலை பாம்பு ஒன்று பிடிபட்டதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தெரிவித்தனர். ஆனால், அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

 

மேலும், தற்போது பிடிபட்ட மலை பாம்பை அப்பகுதியில் தீயணைப்பு துறையினர் மட்டுமே வந்து ஒரு சாக்கு பையில் போட்டு வைத்துள்ளனர். ஆனாலும் அதனை மீட்க வனத்துறையினர் வரவில்லை என அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது.

 

எனவே, வனத்துறையினர் இது போன்று அலட்சியமாக நடந்து கொள்வதை கைவிட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )