வேலூர் அரசு கல்வியியல் கல்லூரியில் கல்வியியல் ஆராய்ச்சி முறையில் என்ற தலைப்பில் தேசிய பயிலரங்கு துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள வேலூர் அரசு கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பாக இரண்டு நாள் கல்வியியல் ஆராய்ச்சி முறையில் என்ற தலைப்பில் தேசிய பயிலரங்கு துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் பி.சி.நாகசுப்பிரமணியம் கலந்து கொண்டு ஆராய்ச்சி முறைகள் எவ்வாறு செய்ய வேண்டும் இளம் மாணவர்கள் ஆராய்ச்சியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பதை பற்றி விளக்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் அரசு கல்வியியல் கல்லூரி முதல்வர் மூர்த்தி ஒருங்கிணைப்பாளர் முனைவர் சா.தனலட்சுமி முனைவர் மா.ராஜ்குமார் மற்றும் பல்வேறு பல்வேறு கல்லூரி பல்கலைக்கழகத்தினை சேர்ந்த ஆராய்ச்சி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES வேலூர்
TAGS கல்லூரியில் கல்வியியல் ஆராய்ச்சிகல்விகாட்பாடிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்வேலூர் அரசு கல்வியியல் கல்லூரிவேலூர் மாவட்டம்