வேலூர் அருகே காட்பாடியில் இரண்டு கட்டிட சுவற்றுக்கு இடையே சிக்கிய பசு மாட்டினை போராடி மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு!!
வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் செல்லும் வழியே உள்ள காந்திநகர் கிழக்குச் சாலையில் அமைந்துள்ள இரண்டு கட்டிட சுற்று சுவற்றுக்கு இடையே இருந்த 3 அடி இடைவெளியில் இன்று அதிகாலை தன் தாயுடன் வந்த மாடு ஒன்று தலை குப்புற விழுந்து மூன்றடி இடைவேளையில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
இதனைக் கண்ட அவ்வழியாக சென்ற பொதுமக்கள் முதலில் மீட்க முயற்சி செய்து மீட்பு முயற்சி தோல்வியடைந்த காரணத்தால் காட்பாடி தீயணைப்புத் துறையினருக்கு மாட்டினை மீட்பதற்காக தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற காட்பாடி தீயணைப்பு துறையைச் சேர்ந்த 8 பேர் கொண்ட மீட்பு குழுவினர் இரண்டு மணி நேரம் போராடி 3 அடி இடைவெளியில் தலை குப்புற விழுந்து சிக்கியிருந்த மாட்டினை கயிறு கட்டி மீட்டனர் மீட்கப்பட்ட மாட்டிற்கு தீயணைப்புத் துறையினர் தண்ணீர் கொடுத்து தாகத்தை தீர்த்தனர்.
மீட்கப்பட்ட மாட்டினை கண்ட தாய் மாடு கன்றினை ஆரத் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. மீட்கப்பட்ட மாடு இருக்கு காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தாயுடன் சேர்த்து வைத்தனர். கட்டிட இளவெளியின் சிக்கிய மாட்டினை இரண்டு மணி நேரம் போராடி மீட்டர் தீயணைப்புத்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.