வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து கவண ஈர்ப்பு ஆர்பாட்டம்
சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து கவண ஈர்ப்பு ஆர்பாட்டம்.
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கருப்பு உடை அணிந்து கவண ஈர்ப்பு ஆர்பாட்டம் மாவட்டத்தலைவர் பியூலா எலிசபெத் ராணி தலைமையில் நடைபெற்றது.
இதில் காலி பணியிடங்களை போர்கால அடிப்படையில் நிரப்பவும் தமிழக அரசு கொண்டு வந்துள்ள காலை உணவு திட்டத்தை சத்துணவு திட்டத்தின் மூலம் சத்துணவு ஊழியர்களை கொண்டே அதனை செயல்படுத்த வேண்டும் ஓய்வு பெறும் வயதினை 62 ஆக உயர்த்த கோரியும் கிராம நிர்வாக ஊழியர்களுக்கு வழங்குவதை போல்..
ஓய்வூதியம் ரூ.6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் அரசின் நிரந்தர காலிப்பணியிடங்களை 50 சதவிகித பணியிடங்களை சத்துணவை கொண்டு நிரப்ப வேண்டும் மகப்பேறு விடுப்பு 12மாதங்கள் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடந்தது இதனை மாவட்ட செயலாளர் வெற்றி செல்வி துவங்கி வைத்தார் இதில் திரளானோர் கலந்துகொண்டு கருப்பு உடை அணிந்து கோசஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்.