வேலூர் ஆரியாஸ் ஹோட்டலில் நுகர்வோருக்கு உணவு வழங்குவதில் மரியாதை குறைபாடு!

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகில் உள்ள ஆரியாஸ் ஹோட்டலில் உணவருந்த செல்லும் நுகர்வோருக்கு உணவு வழங்குவதில் ஹோட்டல் சப்ளையர்கள் மரியாதை குறைபாடாக நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
வேலூர் கிரீன் சர்க்கிள் அருகில் ஆரியாஸ் என்ற ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலில் உணவருந்தச் செல்வோரிடம் ஹோட்டல் சப்ளையர்கள் தரக்குறைவாக நடப்பதாக கடுமையான புகார் எழுந்துள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மதிய உணவு அருந்தும் போது டோக்கன் பெற்றுக் கொண்டுதான் சாப்பிட வேண்டும் என்று ஹோட்டல் சப்ளையர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஹோட்டல் நிர்வாகம் இது குறித்து நுகர்வோருக்கு எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. வழக்கம்போல் உணவருந்தி முடித்துவிட்டு பில் கொடுத்துவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதுகுறித்து நுகர்வோருக்கு தெரிவிக்கும் வகையில் எவ்வித அறிவிப்பு பலகைகளோ ஸ்டிக்கரோ ஹோட்டல் நிர்வாகம் சார்பில் ஒட்டி வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஹோட்டலில் பணியாற்றும் சப்ளையர்களில் சிலர் உணவு அருந்தச் செல்வோரிடம் மிகவும் அநாகரீகமாகவும், அருவெறுக்கத் தக்க வகையிலும், தான்தோன்றித்தனமாகவும், தெனாவெட்டாகவும் நடந்து கொள்கின்றனர்.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த ஹோட்டலுக்கு உணவு அருந்த செல்பவர்கள் பெரும்பாலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் உள்ளூர்காரர்களையும் இவர்கள் அவர்களுடன் சேர்த்து தரக்குறைவாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக இந்த ஹோட்டலினால் பகுதியில் தினந்தோறும் ஏற்படுகிறது.
அத்துடன் இந்த ஹோட்டலுக்கு தனியாக பார்க்கிங் வசதி எதுவும் கிடையாது. வேலூர் மாநகராட்சிக்குச் சொந்தமான சாலையிலேயே கார்கள் முதல் இருசக்கர வாகனங்கள் வரை நிறுத்துவதால் இந்த இடத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஒவ்வொரு வாகனமும் நிறுத்தப்பட்டு பின்னர் பின்பக்கமாக இயக்குவதால் இந்த பகுதியில் அவ்வப்போது விபத்துகளும் நடந்து வருகின்றது. இதனையும் பொதுமக்கள் நலன் கருதி வேலூர் போக்குவரத்து பிரிவு போலீசார் கண்டு கொள்வதே இல்லை.
இதற்கு அடிப்படை காரணம் என்னவென்றால் போக்குவரத்து பிரிவு போலீசார் இந்த ஆரியாஸ் ஹோட்டலில் இருந்து உணவு வகைகளை இலவசமாக மூட்டை கட்டிக்கொண்டு தங்களது வீடுகளுக்கு கொண்டு செல்வதால் இவர்கள் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.
இதனால் ஹோட்டல் முதலாளிகளுக்கு நன்றியுள்ள நாய்கள் போல வாலாட்டுகின்றனர் வேலூர் போக்குவரத்து பிரிவு போலீசார். இப்படி பார்க்கிங் வசதி இல்லாமலேயே இப்படி ஹோட்டல்களை நடத்துவதால் பொதுமக்களுக்கு சொல்லொனா துயரமும், கடுமையான இடையூறும், இடைஞ்சலும் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதலால் இந்த பகுதியில் வாகனங்களை நிரந்தரமாக நிறுத்த போக்குவரத்து பிரிவு போலீசார் ஹோட்டல் நிர்வாகத்துக்கு தடை விதிக்க வேண்டும். போக்குவரத்து பிரிவு போலீசார் தடை விதிக்கிறார்களோ இல்லையோ வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் இந்த இடத்தில் சுமார் ஒரு மணி நேரம் நின்று கண்காணித்தால் இதன் உண்மை என்ன, பொய் என்ன என்பது தெரிய வரும்.
ஆதலால் பொதுமக்களின் நலன் கருதி இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை அடியோடு நிறுத்தவும் இந்த ஹோட்டலுக்கு எதிரில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை நிரந்தரமான பார்க்கிங் வசதி உள்ள இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன் ஹோட்டல் சப்ளையர்கள் நடத்தும் அராஜக விளையாட்டுக்கும், நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க நுகர்வோர் அமைப்புகள் ஆயத்தமாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஹோட்டலின் மீது பொதுமக்களுக்கு சேவை குறைபாடு அளிப்பதோடு, அவர்கள் மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் அவர்களை ஒருமையில் பேசி அவர்களை மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் சப்ளையர்கள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் சமூக ஆர்வலர்கள் ஆயத்தமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்குள்ளாக ஹோட்டல் நிர்வாகம் இந்த பார்க்கிங் வசதிக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹோட்டல் நிர்வாகம் பார்க்கிங் வசதியை ஏற்படுத்திக் கொள்ளுமா? அல்லது கண்டும் காணாமல் விட்டுவிடுமா என்பதையும், போக்குவரத்து பிரிவு போலீசார் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கிறார்களா என்பதையும் நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்