வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் போலீசாரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி காவல் துறை அலட்சியத்தால் மணவுலச்சலாண பெண் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆட்சியர் ஆறுதல் தெரிவிப்பு!

வேலூர் மாவட்டம், வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீசாரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வடுகன்குட்டை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மனைவி கோட்டீஸ்வரி (வயது-49). இவரது மகன் கடந்த 2018-ம் ஆண்டில் லாரி மோதியை விபத்தில் உயிரிழந்தார்.
ஆனால் சம்மந்த காவல்நிலையம் முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) தவறுதலாக பதிவு செய்த காரணத்தால் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. காவல்நிலையம் முதல் எஸ்.பி.அலுவலகம் வரை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் பலமுறை அலைகழித்து உள்ளனர்.
இதனால் மணவுளச்சலுக்கு ஆளான கோட்டீஸ்வரி மக்கள் குறைதீர்வு நாள் கூட்ட திங்கள்கிழமையன்று வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்னை பாட்டிலை எடுத்து தன் மீது ஊற்றியபோது அருகில் இருந்தபோலீசார் தடுத்து நிறுத்தினர்.
பிறகு மாவட்ட ஆட்சியர் பெ.குமரவேல் பாண்டியனிடம் மனு கொடுத்தார். மாவட்ட ஆட்சியர் அந்த பெண்ணுக்கு ஆறுதலும், அறிவுரையும் கூறி அனுப்பி வைத்தார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.