BREAKING NEWS

வேலூர் கோட்டையை சுற்றி ஜலவலம் சென்ற 50 பேர் மீது வழக்குப்பதிவு

வேலூர் கோட்டையை சுற்றி ஜலவலம் சென்ற 50 பேர் மீது வழக்குப்பதிவு

வேலூர் கோட்டையை சுற்றி ஜலவலம் சென்ற 50 பேர் மீது வழக்குப்பதிவு

வேலுார் ஜலகண்டே ஸ்வரர் கோவில் அமைந்து ள்ள கோட்டையை சுற்றி பவுர்ணமி நாளில் வலம் வரும் வகையில், ‘ஜலவலம்’ கடந்த மாதம் 23-ந் தேதி முதன் முறையாக தொடங்கப்பட்டது.
2-வது மாதமாக நேற்றிரவு பங்குனி மாத பவுர்ணமியையொட்டி சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கோட்டை கோவிலில் இருந்து ஜலவலத்தை தொடங்கினர்.

கோட்டை சுற்றுப்ப்பாதையில் ஜலவலம் செல்ல முயற்சித்த வர்களை டி. எஸ்.பி திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மேலும் கூட்டமாக செல்ல அனுமதி கிடையாது என்றனர். நாங்கள் கூட்டமாக செல்ல வில்லை. தனித்தனியாக ஜலவலம் செல்கிறோம் என கூறி வீட்டு பக்தர்கள் ஜலவலத்தை தொடங்கினர்

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து அனுமதி இன்றி ஜலவலம் சென்ற தற்காக இந்து முன்னணி வேலுார் கோட்ட தலைவர் மகேஷ், பொருளாளர் பாஸ்கர், அப்பு பால் பாலாஜி உட்பட 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

CATEGORIES
TAGS