வேலூர் சேண்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் வழிப்பறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா.

வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் கொ ணவட்டம் போக்குவரத்து கழக பணிமனை எதிரில் உள்ள சர்வீஸ் ரோட்டில் டூவீலர் மற்றும் நடந்து செல்லும் நபர்களிடம் செல்போன். பணம் போன்றவற்றை மிரட்டி பறித்துச் செல்லும் வழிப்பறி சம்பவம் தொடர்கதையாகி வருவதாக நடைபெற்ற சம்பவங்கள் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற சம்பவங்களில் பணம்.செல்போனை இழந்த சிலர் வழிப்பறி கும்பலுக்கு பயந்து காவல் துறைக்கு புகார் தராமல்மௌனம் காக்கின்றனர். வழிப்பறி நடக்கும் பகுதியில் பகல் இரவு நேரங்களில் நடந்துசெல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். பொதுமக்களின் இந்த அச்சத்தை போக்க வழிப்பறி குற்றங்களை தடுக்க மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா சம்பவம் நடக்கும் பகுதிகளில் கூடுதலாக ரோந்து பணியினை அதிகரித்துகுற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்களின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து பொது மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது

