BREAKING NEWS

வேலூர் தனியார் விடுதியில் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் தற்கொலை போலீசார் விசாரணை.

வேலூர் தனியார் விடுதியில் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் தற்கொலை போலீசார் விசாரணை.

ஆந்திர மாநிலம் சித்தூர் கட்ட மஞ்ச் பகுதியை சேர்ந்தவர் இவரது மகள் ஷாஜலதா (36). இவர் சித்தூர் மாநகராட்சியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஷாஜலதாவின் தாய் உடல் நல குறைவால் இறந்துள்ளார்.

 

தாய் இறந்தது முதல் ஷாஜலதா யாரிடமும் பேசாமல் விரகத்தியில் இருந்து வந்துள்ளார் இதனால் அவருக்கு சற்று லேசான மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

ஷாஜலதா அடிக்கடி வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம் இந்த நிலையில் நேற்று முன்தினம் அரியூருக்கு வந்த ஷாஜலதா அங்குள்ள தனியார் விடுதியில் அரை எடுத்து தங்கி உள்ளார் நேற்று இரவு தனது சகோதரர் லட்சுமிகாந்திற்கு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி உள்ளார்.

 

வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜை பார்த்த அவரது சகோதரர் வேலூருக்கு விரைந்து வந்தார். ஷாஜலதா தங்கி இருந்த தனியார் விடுதியில் உள்ள அவரது அறைக்கு சென்று பார்த்தபோது அவர் அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

 

இந்த சம்பவம் குறித்து தகவல் தகவல் தெரிவிக்கப்பட்டு அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஷாஜலதா பிணத்தை மீட்டு பிரத பரிசோ தனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஷாஜலதா தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

CATEGORIES
TAGS