BREAKING NEWS

வேலூர் தாலுகா காவல் சரகம், கணியம்பாடி பகுதியில் உள்ளே வெளியே சூதாட்டம் அமோகம்: கண்டு கொள்ளாமல் குறைட்டைவிடும் தாலுகா போலீசார்!

வேலூர் தாலுகா காவல் சரகம், கணியம்பாடி பகுதியில் உள்ளே வெளியே சூதாட்டம் அமோகம்: கண்டு கொள்ளாமல் குறைட்டைவிடும் தாலுகா போலீசார்!

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா காவல் சரகம், கம்ம சமுத்திரம் பகுதி காரமலை மலை அடிவாரத்தில் அமோகமாக ‘உள்ளே வெளியே’ சூதாட்டம் தினமும் நடந்து வருகிறது.

இதனை வேலூர் மாவட்டம், கம்ம சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பிச்சாண்டி மகன் பிரபு (28) மற்றும் பாலத்துவண்ணான் சரகு மலை கீழ் பகுதியைச் சேர்ந்த உதயா (45) ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து இந்த ‘உள்ளே வெளியே’ சூதாட்டம் சீட்டு கட்டு விளையாட்டை அமோகமாக நடத்தி அப்பாவி தொழிலாளிகளின் பணத்தை பறித்து வாரி குவிக்கின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலம்பரசன் சம்பவ இடமான கம்மசமுத்திரம் பகுதி காரமடை மலையடிவாரத்தின் கீழ் பகுதிக்குச் சென்று பிரபு மற்றும் உதயா ஆகியோரிடம் மாமூலை பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், கைது செய்யாமல் விட்டுவிட்டு வந்து விட்டார் என்று கூறப்படுகிறது.

அத்துடன் மாதா மாதம் இந்த உதயா என்பவர் சிலம்பரசனுக்கு ரூபாய் ஒரு லட்சம் மாமூல் செலுத்துகிறார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்த சூதாட்டம் நடப்பதை அறிந்து கொண்ட சூதாட்டம் ஆடும் நபர்கள் இந்த கம்மசமுத்திரம் பகுதி காரமடை மலை அடிவார பகுதிக்குச் சென்று சூதாட்டம் ஆடி தங்களது பையில் உள்ள பணத்தை இழந்து விட்டு திரும்புவதை அன்றாட வாடிக்கையாக மாற்றிக் கொண்டுள்ளனர்

என்று சொன்னால் அது மிகையாகாது. இந்நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் நடவடிக்கை எடுக்காமல் குறிப்பாக கண்டும் காணாமல் விட்டுவிட்டது தான் வேடிக்கையிலும் வேடிக்கை என்று சொல்லலாம்.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், வேலூர் சரக டிஐஜி தேவராணி மற்றும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் போன்ற காவல்துறை உயர் அதிகாரிகள் வேலூர் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலம்பரசன் மற்றும் காவல் ஆய்வாளர் சுபா ஆகியோர் மீது காவல்துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்றும்

இது போன்ற உழைக்கும் வர்க்கத்தினரின் ரத்தத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடிக்கும் சூதாட்ட கிளப் நடத்தும் பிரபு மற்றும் உதயா ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், கணியம்பாடி பகுதி வாழ் பொது மக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இனி காவல்துறையின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சூதாட்ட கிளப் தொடர்ந்து நடக்குமா?

அல்லது உதயா, பிரபு ஆகியோர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்யப்படுவார்களா?

என்பதும் போகப் போகத்தான் தெரியும். இதில் உதயா என்பவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இவர் காவல்துறையின் கைகளில் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பார்களா? அல்லது வெளியில் விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பார்களா? என்பதும் காலத்தின் கையில் தான் உள்ளது.

செய்தி ஆசிரியர் ச வாசுதேவன் 

CATEGORIES
TAGS